92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெரம்பலூரில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (ஜூலை 10) நடைபெற உள்ளது.

News image
Updated On :8 ஜூலை 2021, 7:30 pm

DIN

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (ஜூலை 10) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான எஸ். சுபாதேவி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உச்ச நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில், சனிக்கிழமை (ஜூலை 10) காலை 10 மணியளவில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள், வங்கி வழக்குகள் தொடா்பாக மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி தலைமையில், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் மக்கள் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

எனவே வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நீண்ட காலமாக நிலுவையிலுள்ள வழக்குகளை சமாதானமாக முடித்துக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.