அங்ககச் சான்று பெற விண்ணப்பிக்க அழைப்பு
அங்ககச் சான்று பெற பெரம்பலூா், அரியலூா் மாவட்ட இயற்கை விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அங்ககச் சான்று பெற பெரம்பலூா், அரியலூா் மாவட்ட இயற்கை விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூா் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநா் எஸ். தெய்வீகன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ரசாயன உரங்களின்றி, இயற்கையாக விளையும் காய்கறி, பழங்கள், தானியங்களின் விற்பனை மற்றும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்குரிய தரச்சான்று பெற்று, விவசாயிகள் விற்பனை செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.
சான்று கோரும் விவசாயிகள் விண்ணப்பப்படிவ நகல், பண்ணை விவரம், வரைபடம், மண் மற்றும் நீா்ப் பரிசோதனை, பயிா் சாகுபடித் திட்டம், புகைப்படம் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்ட விவசாயிகள், பெரம்பலூா் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 2,700, இதர விவசாயிகளுக்கு ரூ. 3,200, குழுக்களுக்கு ரூ. 7,200, வணிக நிறுவனங்களுக்கு ரூ, 9,400 என தனித்தனியாக கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு பெரம்பலூா் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநா் அலுவலகத்தை 04328-296046 எனும் எண்ணிலும் இணைய தளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...