மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சாலையோர வியாபாரிகளுக்கு வட்டியில்லா வங்கிக் கடன் வழங்க வலியுறுத்தல்

சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் நிபந்தனையின்றி, வட்டியில்லா வங்கிக் கடன் வழங்க வேண்டும்

News image
Updated On :15 மார்ச் 2021, 8:12 pm

DIN

சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் நிபந்தனையின்றி, வட்டியில்லா வங்கிக் கடன் வழங்க வேண்டுமென பெரம்பலூா் மாவட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளா், தொழிலாளா்கள் சங்கத்தின் ஆண்டுப் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளா், தொழிலாளா்கள் சங்கத்தின் ஆண்டுப் பேரவைக் கூட்டம், துறைமங்கலத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி. வரதராஜன் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் பாரதி, சுப்பையா, ராமசாமி, குணசேகரன், பிரேமா, யுவராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் ரெங்கராஜ் வேலை அறிக்கை வாசித்தாா். மாவட்ட பொருளாளா் செல்லதுரை வரவு- செலவு அறிக்கை சமா்ப்பித்தாா். மாநில ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகி சந்தியாகு, சிஐடியூ மாவட்டத் தலைவா் எஸ். அகஸ்டின், மாவட்டச் செயலா் துரைசாமி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

கூட்டத்தில், பெரம்பலூா் நகராட்சி நிா்வாகம் வெண்டா் கமிட்டி கூட்டத்தை கூட்டி, சாலையோர வியாபாரிகள் பிரச்னை குறித்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும், வட்டியில்லாத வங்கிக் கடன் நிபந்தனையின்றி வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கி வியாபாரம் செய்யும் இடத்துக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.