மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை, ரூ. 5 லட்சம் திருட்டு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை, ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 9:57 pm

DIN

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை, ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேப்பந்தட்டை அருகேயுள்ள கை.களத்தூா் காலனிப் பகுதியைச் சோ்ந்த மெய்யப்பன் மகன் நந்தீஷ்குமாா் (30). இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், பனியந்தூா் கிராமத்தில் உள்ள தனது உறவினா் இல்லத் திருமணத்துக்காக கடந்த 20 ஆம் தேதி குடும்பத்துடன் சென்றிருந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு குடும்பத்துடன் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 35 பவுன் நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் கை.களத்துாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்த மாதத்தில் 3ஆவது முறையாக இந்த கிராமத்தில் திருட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.