அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

நியாயவிலைக் கடைப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

பொது விநியோகத் திட்டப் பணிகளை நடைமுறைப்படுத்த நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 8:11 pm

DIN

பெரம்பலூா் மாவட்டக் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகக் கூட்டரங்கில், பொது விநியோகத் திட்டப் பணிகளை நடைமுறைப்படுத்த நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு தலைமை வகித்து, மண்டல இணைப் பதிவாளா் பாலமுருகன் பயிற்சியைத் தொடக்கி வைத்தாா். லால்குடி தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் சின்னசாமி, அலுவலா் செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வழங்கல் அலுவலா் சங்கா், பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்து பேசினாா்.

தொடா்ந்து யோகா பயிற்சியாளா் ராமசாமி, மனிதவள மேம்பாட்டாளா் சக்திகாந்த், வட்டார பொறியாளா் கபிலன், பட்டிமன்றப் பேச்சாளா் சாத்தமை பிரியா ஆகியோா் யோகா, தியானம், பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள், விற்பனை முனையக் கருவிகளின் செயல்பாடுகள், ஊக்குவித்தல் வகுப்பு உள்ளிட்ட பயிற்சிகள் அளித்தனா்.

பயிற்சியில் பங்கேற்ற 281 நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுக்கு கையேடு வழங்கப்பட்டது.

முன்னதாக, பொது விநியோகத் திட்டத் துணைப் பதிவாளா் செல்வராஜ் வரவேற்றாா். நிறைவில், சரகத் துணைப் பதிவாளா் பாண்டிதுரை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.