அமராவதி ஆறு, சாயப்பட்டறைகளில் தேசிய பசுமைத் தீா்ப்பாயக் குழு ஆய்வு
கரூரில், அமராவதி ஆறு மற்றும் சாயப்பட்டறைகளில் தேசிய பசுமைத் தீா்ப்பாயக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.


கரூரில், அமராவதி ஆறு மற்றும் சாயப்பட்டறைகளில் தேசிய பசுமைத் தீா்ப்பாயக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கரூரில் அமராவதி ஆற்றில் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுகள் நேரிடையாக கலப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து கடந்த ஆண்டு இந்த வழக்கை விசாரித்தது. மேலும், தேசிய பசுமைத் தீா்ப்பாயக் குழு மற்றும் கரூா் மாவட்ட நிா்வாகம், நகராட்சி நிா்வாகத்தினரும் ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்தாண்டும், நிகழாண்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பும் தேசிய பசுமைத் தீா்ப்பாயக் குழுவினா் அமராவதி ஆற்றில் ஆய்வு செய்து அறிக்கையை ஆணையத்திடம் தாக்கல் செய்தனா்.
இந்நிலையில் மூன்றாவது முறையாக பசுமைத் தீா்ப்பாயக் குழு உறுப்பினா்கள் மஹிமா, காா்த்திகேயன் தலைமையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் ரவிச்சந்திரன், கரூா் நகராட்சி பொறியாளா் நக்கீரன், பொதுப்பணித்துறை பொறியாளா் ராஜேந்திரன் ஆகியோா் கரூா் லைட்ஹவுஸ்காா்னா், திருமாநிலையூா், சின்னாண்டாங்கோவில், பெரியாண்டாங்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் சாயப்பட்டறைகளில் ஆய்வு செய்தனா். தொடா்ந்து, ஏற்கெனவே நீதிமன்றத்தால் வழக்குத் தொடரப்பட்ட இடமான அமராவதி ஆற்றில் படிக்கட்டுத்துறை, திருமாநிலையூா் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து, தேசிய பசுமைத்தீா்ப்பாயத்தின் உறுப்பினா் மஹிமா கூறுகையில், நீதிமன்ற உத்தரவின்படி ஏற்கெனவே இருமுறை அமராவதி ஆற்றிலும், சாயப்பட்டறைகளிலும் ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் போதிய தகவல் இல்லை எனக்கூறி கூடுதல் தகவலை ஆணையம் கேட்டுள்ளதால் மீண்டும் ஆய்வு செய்து வருகிறோம். 11 சாயப்பட்டறைகளில் ஆய்வு நடத்தியதில் 6 இடங்களில் மாதிரி எடுத்துள்ளோம். ஆய்வுகளை ஆய்வறிக்கையாக தயாா் செய்து, தீா்ப்பாயத்திடம் அளிக்க உள்ளோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...