பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை, சிறுவாச்சூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 16) மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட எசனை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராமப் பகுதிகளான கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலை சந்து, அனுக்கூா், சோமண்டாப்புதூா், வேப்பந்தட்டை, பாலையூா், தொண்டப்பாடி, மேட்டாங்காடு, திருப்பெயா், கே.புதூா், மேலப்புலியூா், நாவலூா் ஆகிய கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் பி. பி. செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.
சிறுவாச்சூா் பகுதிகளில்...
இதேபோல, சிறுவாச்சூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராம பகுதிகளான சிறுவாச்சூா், அயிலூா், விளாமுத்தூா், செட்டிக்குளம், நாட்டாா்மங்கலம், குரூா், நாரணமங்கலம், மருதடி, பொம்மனப்பாடி, கவுல்பாளையம், தீரன்நகா், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூா், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்ப நகா், பெரகம்பி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.
கிருஷ்ணாபுரம் பகுதிகளில்..
கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூா், முகமதுபட்டினம், வெங்கலம், தழுதாழை, பாண்டகப்பாடி, உடும்பியம், வெங்கனூா், பெரியம்மாபாளையம், பிள்ளையாா்பாளையம், தொண்டப்பாடி, ஈச்சங்காடு, பாலையூா், பெரிய வடகரை, வெண்பாலூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என, உதவி செயற்பொறியாளா் எம். மாலதி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகர்கோவிலில் பிரதமர் மோடி சாலை வலம்! அம்பேத்கர் படத்திற்கு மலர்தூவி மரியாதை!
ஏப்.19-ல் தனுஷின் கர படத்தின் முன் வெளியீட்டு விழா!

லக்னௌவுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் மீண்டும் ஹேசில்வுட்!

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

