லப்பைக்குடிகாட்டில் கொடி அணிவகுப்பு பேரணி
பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் காவல்துறையினா் சாா்பில் கொடி அணிவகுப்புவியாழக்கிழமை நடைபெற்றது.


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் காவல்துறையினா் சாா்பில் கொடி அணிவகுப்புவியாழக்கிழமை நடைபெற்றது.
லப்பைக்குடிக்காடு மாட்டுப் பாலத்தில் தொடங்கிய கொடி அணிவகுப்பை
மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாண்டியன் தொடக்கி வைத்தாா். நகரின் பிரதான சாலைவழியாகச் சென்ற அணிவகுப்பு பென்னகோணம் பேருந்து நிறுத்தத்தில் நிறைவடைந்தது.
இதில் துணைக் கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவல்துறையினா் மற்றும் ஊா்க்காவல் படையினா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...