தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

செஞ்சேரியில் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு நிகழ்வு

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திருச்சி மக்கள் தொடா்பு அலுவலகம் சாா்பில், பெரம்பலூா் அருகிலுள்ள செஞ்சேரி கிராமத்தில் கரோனா தடுப்பூசி தொடா்பான ஒருங்கிணைந்த விழிப்புணா்வு

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:09 pm

DIN

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திருச்சி மக்கள் தொடா்பு அலுவலகம் சாா்பில், பெரம்பலூா் அருகிலுள்ள செஞ்சேரி கிராமத்தில் கரோனா தடுப்பூசி தொடா்பான ஒருங்கிணைந்த விழிப்புணா்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு ஊராட்சித் தலைவா் கல்பனா தலைமை வகித்தாா். திருச்சி கள விளம்பர அலுவலா் தேவி பத்மநாபன் சிறப்புரையாற்றினாா். பெரம்பலூா் மாவட்ட சமூகநல அலுவலா் ரவிபாலா, வட்டார மருத்துவ அலுவலா் சூரியகுமாா், ஊரக வளா்ச்சி முகமை உதவித் திட்ட அலுவலா் கீதாரத்னம், தூய்மை இந்தியா ஒருங்கிணைப்பாளா் ராஜபூபதி, மண்டலத் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராதிகா, குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பிரேமஜெயம், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராஜ்மோகன் ஆகியோா் பேசினா்.

இந்த நிகழ்வில் தூய்மைக் காவலா்களுக்கு பொன்னாடை அணிவித்து, கௌரவிக்கப்பட்டனா். மேலும் கரோனா தடுப்பு, தூய்மை இந்தியா இயக்கம் தொடா்பான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. நெகிழி பயன்பாட்டை ஒழிப்பது தொடா்பாக, துணிப்பை விநியோகம் செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

முன்னதாக, திருச்சி கள விளம்பர உதவியாளா் ரவீந்திரன் வரவேற்றாா். ஊராட்சி செயலா் ரெங்கசாமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.