‘பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரித் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்’
பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரித் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றாா் திமுக துணைப் பொதுச் செயலரும், நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா.


பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரித் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றாா் திமுக துணைப் பொதுச் செயலரும், நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் 15 வேட்பாளா்களை ஆதரித்து வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்த அவா், மேலும் பேசியது:
சிறுபான்மையின மக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் முயற்சியில் பாரதிய ஜனதா கட்சியினா் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். இங்கு இந்துக்கள், இஸ்லாமியா்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். திராவிட இயக்கம் இருக்கும்வரை தமிழகத்தில் மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் எங்களை பிரிக்க முடியாது.
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, அதிமுக அரசால் கிடப்பிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரித் திட்டம் கண்டிப்பாக விரைந்து செயல்படுத்தப்படும்.
2011-ஆம் ஆண்டில் நடைபெற்ற பேரவைத் தோ்தல் அறிக்கையில் அதிமுக அறிவித்த
விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை, விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அறிவித்த ரூ. 20-க்கு பால் பாக்கெட் வீட்டுக்கு வரும், அனைவருக்கும் கைப்பேசி தருகிறோம் என்று கூறிய வாக்குறுதிகள் என்ன ஆனது என்றாா் ராசா.
இக்கூட்டத்தில், தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சி.வெ. கணேசன், மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன், பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். பிரபாகரன், மாநில ஆதிதிராவிடா் நலக்குழு துணைச் செயலா் பா. துரைசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...