தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சிக் கூட்டம்

 பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், பதற்றமான வாக்குப் பதிவு மையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 10:29 pm

DIN

 பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், பதற்றமான வாக்குப் பதிவு மையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை இயக்குநரும், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பாா்வையாளருமான டி. ரத்னா பேசியது:

மாவட்டத்தில் 11 வாக்குப் பதிவு மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இதில், ஒரு வாா்டு உறுப்பினா் பகுதியில் போட்டியின்றி வேட்பாளா் தோ்வு செய்யப்பட்டுள்ளதால், எஞ்சிய 10 வாக்குப் பதிவு மையங்கள் பதற்றமானவையாகும். இப் பகுதிகளில் நுண் பாா்வையாளராக பணிபுரிவோா் வாக்குப் பதிவு மையங்களில் சிசிடிவி கேமரா மூலம் ஒளிப்பதிவு செய்யப்படுவதையும், வாக்காளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், போதிய காற்றோட்டம் உள்ளதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

முகவா்களின் அடையாள அட்டைகள், ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவா் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை கண்காணிக்க வேண்டும். வாக்குப் பதிவு மையங்களில் நடைபெறும் நிகழ்வுகளை கவனத்துடன் கண்காணித்து, அதை உயா் அலுவலா்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா முன்னிலையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், ஊராட்சிகள் உதவி இயக்குநா் ம. பாரதிதாசன், கலால் உதவி ஆணையா் ஷோபா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (சத்துணவு) லதா, (நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்) மோகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.