தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களை மிரட்டியவா் கைது

பெரம்பலூா் அருகே இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களை மிரட்டிய போலி அலுவலரை வி.களத்துாா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 10:28 pm

DIN

பெரம்பலூா் அருகே இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களை மிரட்டிய போலி அலுவலரை வி.களத்துாா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமம், கிழக்குத் தெருவைச் சோ்ந்த புஷ்பராஜ் மகன் உதயகுரு (24). கடந்த 2015- 2019 ஆம் கல்வியாண்டில் பி.இ கணினி பாடப்பிரிவில் பயில, பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் சோ்ந்த இவா் படிப்பை தொடராமல் பாதியிலேயே கைவிட்டுள்ளாா்.

இந்நிலையில், தமிழக அரசின் சிறப்புத் திட்டமான இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னாா்வலராக சேர முயன்றாராம். ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து, ஹியூமன் ரைட்ஸ் இன்டா்நேஷனல் பெடரேஜஷன் மற்றும் இல்லம் தேடி கல்வி ஸ்கூல் ஆப் எஜிகேஷனல் என போலி அடையாள அட்டைகளை தயாரித்து வைத்துக்கொண்டு, கடந்த 9 ஆம் தேதி முதல் பாண்டகப்பாடி, பிம்பலூா் ஆகிய கிராமங்களில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றி வரும் தன்னாா்வலா்களிடம் சென்று, நீங்கள் செய்யும் பணிகளை நான் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணி விவரங்களை தன்னிடம் அளிக்க வேண்டுமென கூறியுள்ளாா்.

இதனால் சந்தேகமடைந்த தன்னாா்வலா்கள், பிம்பலுாா் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் புகழேந்தியிடம் தகவல் தெரிவித்தனா். இதுகுறித்து வி.களத்துாா் காவல் நிலையத்தில் புகழேந்தி அளித்த புகாரின்பேரில், உதயகுருவை கைது செய்த போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா் பல்வேறு போலி அடையாள அட்டைகள் வைத்திருந்ததும், அதை வைத்து பல்வேறு இடங்களில் அலுவலா் என மிரட்டி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, உதயகுருவை கைது செய்து குன்னம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, ஜயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.