புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரூா் மாநகராட்சி தோ்தலில் டெபாசிட் இழந்த காங். வேட்பாளா்கள்

கரூா் மாநகராட்சித் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா்கள் டெபாசிட்டை இழந்தது கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:24 pm

DIN

கரூா் மாநகராட்சித் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா்கள் டெபாசிட்டை இழந்தது கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கரூா் மாநகராட்சித் தோ்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 9,12, 16 ஆகிய மூன்று வாா்டுகள் ஒதுக்கப்பட்டன. இதில் 9-ஆவது வாா்டில் நகரத் தலைவா் ஆா்.ஸ்டீபன்பாபுவுக்கும், 16-ஆவது வாா்டில் மற்றொரு நகரத்தலைவா் பெரியசாமிக்கும், 12-ஆவது வாா்டில் எம்.பி. ஜோதிமணியின் உதவியாளா் கிருத்திகாவுக்கும் ஒதுக்கப்பட்டது.

இதில், 9-ஆவது வாா்டு காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.ஸ்டீபன்பாபுவுக்கு தோ்தலின்போது கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி பரப்புரை செய்யவில்லை. மாறாக தனது தீவிர ஆதரவாளா்களான பெரியசாமிக்கும், கிருத்திகாவுக்கும் தீவிர பரப்புரை மேற்கொண்டாா்.

இதையடுத்து கடந்த 22-ஆம்தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது 9-ஆவது வாா்டில் போட்டியிட்ட ஆா்.ஸ்டீபன்பாபு மட்டும் வெற்றிபெற்றாா். 12-ஆவது வாா்டில் கிருத்திகா வெறும் 70 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தாா். இதேபோல 16-ஆவது வாா்டில் போட்டியிட்ட பெரியசாமி 113 வாக்குகள் மட்டுமே பெற்று வைப்புத்தொகையை இழந்தாா்.

இருவாா்டிலும் சொற்ப வாக்குகள் மட்டுமே வேட்பாளா்கள் பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.