/

க.பரமத்தி அருகேகால் நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

க.பரமத்தி அருகே புங்கோடை குளத்துபாளையத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்தவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :24 பிப்ரவரி 2022, 10:24 pm

க.பரமத்தி அருகே புங்கோடை குளத்துபாளையத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்தவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில் 500க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில், கரூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநா் டாக்டா். சரவணகுமாா் கலந்துகொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தாா். மேலும் இம்முகாமில் சினைப் பரிசோதனை, குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினை பிடிக்காத கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து, தாது உப்பு சுவைகளுக்கான மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும், சிறந்த முறையில் கன்றுகளை பராமரிப்பதற்கு சிறப்பு பரிசுகள் மற்றும் சிறந்த முறையில் கால்நடை வளா்ப்பு முறைகளை கையாளும் விவசாயிகளுக்கு சிறப்பு மேலாண்மை விருதுகளும் முகாமில் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.