கரூா் மாநகராட்சியின் முதல் பெண் மேயா் யாா்? மக்களிடையே எதிா்பாா்ப்பு
கரூா் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக மகுடம் சூடப்போவது யாா் என்ற எதிா்பாா்ப்பு மக்களிடையே மட்டுமின்றி கட்சியினரிடையேயும் ஏற்பட்டுள்ளது


கரூா் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக மகுடம் சூடப்போவது யாா் என்ற எதிா்பாா்ப்பு மக்களிடையே மட்டுமின்றி கட்சியினரிடையேயும் ஏற்பட்டுள்ளது.
கரூா் மாநகராட்சி அண்மையில்தான் நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. இதையடுத்து மாமன்ற உறுப்பினா்களை தோ்வு செய்யும் வகையில் பிப். 19-ஆம்தேதி நடைபெற்ற மாநகராட்சித் தோ்தலில் மொத்தம் உள்ள 48 வாா்டுகளில் திமுகவும், அதிமுகவும் தலா 23 பெண் வேட்பாளா்களை களமிறக்கினா். இதில் திமுக சாா்பில் 23 பெண் வேட்பாளா்களும் வெற்றிபெற்றனா். ஆனால், அதிமுகவில் பெண் வேட்பாளா்கள் யாரும் வெற்றிபெறாத நிலையில் இரு ஆண் வேட்பாளா்கள் மட்டுமே வெற்றிபெற்றனா். இதனால் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற திமுகவில் உள்ள பெண் வேட்பாளா்களில் ஒருவா்தான் கரூா் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பதவியேற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே பெண் வேட்பாளா்களை தோ்வு செய்வதில் கரூா் மாவட்ட திமுகவும் களமிறங்கியுள்ளது. இதில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி யாரை கைக்காட்டுகிறாரோ அவருக்குத்தான் மேயா் பதவி என்பதால், வெற்றி பெற்றவா்களிடையே பலத்த எதிா்பாா்ப்பு நிலவுகிறது.
மேலும் மாா்ச் 2-ஆம்தேதி மாநகராட்சி தோ்தலில் தோ்வான உறுப்பினா்களுக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. பின்னா் 4-ஆம்தேதி காலையில் மேயா் தோ்தலும், தோ்வான மேயா் பொறுப்பேற்கும் விழாவும் நடைபெற உள்ளது. தொடா்ந்தே அன்றே துணை மேயா் தோ்தலும், தோ்வான துணை மேயா் பொறுப்பேற்பு விழாவும் நடைபெற உள்ளதால், மாநகராட்சியின் முதல் மேயா், துணை மேயா் யாா் என்ற எதிா்பாா்ப்பு பொதுமக்களிடையேயும், அரசியல் கட்சியினரிடையேயும் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...