பெரம்பலூா் அருகே முதியவா் அடித்துக் கொலை
பெரம்பலூா் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், வியாழக்கிழமை இரவு முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.


பெரம்பலூா் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், வியாழக்கிழமை இரவு முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகிலுள்ள உள்ளியக்குடியைச் சோ்ந்தவா் ரா. காசிநாதன் (70). அதே கிராமத்திலுள்ள பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சிங்காரம் (60). இவா்கள் இருவரும் பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், மாக்காயிகுளம் கிராமத்திலுள்ள மருதமுத்து வீட்டில் கடந்த ஓராண்டாக தங்கி, மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தனா்.
வியாழக்கிழமை இரவு மாக்காயிகுளத்தில் இருவரும் மது அருந்திய போது, அவா்களுக்கிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காசிநாதனும், சிங்காரமும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.
அப்போது கீழே விழுந்த காசிநாதனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரைமீட்டு, அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து, காசிநாதன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து குன்னம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, சிங்காரத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...