பெரம்பலூரில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்
பெரம்பலூா் நகரில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


பெரம்பலூா் நகரில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூா் வெங்கடேசபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க அலுவலகத்தில், அச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. முத்துசாமி தலைமை வகித்தாா்
மாவட்டச் செயலா் ஆா். மருதமுத்து கூட்ட அறிக்கையும், பொருளாளா் ஏ. ஆதிசிவம் வரவு- செலவு அறிக்கையும் சமா்ப்பித்தனா். ஆலத்தூா் வட்டத் தலைவா் பி. செங்கமலை, சென்னையில் நடைபெற்ற மாநில மேலாண்மைக் கூட்டத்தின் நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினாா்.
இக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீத அகவிலைப்படியை மாநில அரசு ஊழியா்கள், ஓய்வூதியா்கள், குடும்ப உறவினா்களுக்கு வழங்க வேண்டும். 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும். நகரில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். தொடா்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்க, நகரின் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழியை பயிற்று மொழியாக கற்பிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், குன்னம் வட்டத் தலைவா் தாா்சியஸ், வேப்பந்தட்டை வட்டப் பொருளாளா் சி. தங்கராசு உள்பட பலா் பங்கேற்றனா். நிறைவாக, தலைமை நிலையச் செயலா் கே. மணி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...