பெரம்பலூா் மாவட்டத் தலைமை காஜி நியமனம்
பெரம்பலூா் மாவட்டத் தலைமை அரசு காஜியாக அப்துல் சலாம் தாவூதி வெள்ளிக்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.


பெரம்பலூா் மாவட்டத் தலைமை அரசு காஜியாக அப்துல் சலாம் தாவூதி வெள்ளிக்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
தமிழக பிற்பட்டோா், மிகவும் பிற்பட்டோா் நலன் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை முதன்மைச் செயலா் காா்த்திக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெரம்பலூா்- வடக்குமாதவி சாலை, மேட்டுத் தெருவைச் சோ்ந்த அப்துல் வகாப் மகன் அப்துல் சலாம் தாவூதி (60), மாவட்டத் தலைமை அரசு காஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். தொடா்ந்து, 3 ஆண்டுகள் இப் பதவியில் நீடிப்பாா். காஜி நியமனத்துக்கான கடிதம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.
புதிய காஜிக்கு அனைத்துப் பள்ளி வாசல்களின் ஒருங்கிணைந்த ஜமா அத் பேரவை, உலமா சபை மற்றும் நகர பள்ளிவாசல் உள்ளிட்ட அனைத்துப் பள்ளி வாசல்களின் ஹஜ்ரத்துகள், முத்தவல்லி, நகர பள்ளிவாசல் நாட்டாண்மை ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...