மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

முத்திரையிடாத எடையளவுகள், தராசுகள் பறிமுதல்

பெரம்பலூா் சந்தை, காய்கறி மாா்க்கெட், சாலையோர வணிகா்கள் பயன்படுத்திய முத்திரையிடாத எடையளவுகள் மற்றும் தராசுகள் ஆகியவை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :7 மே 2022, 1:13 am

DIN

பெரம்பலூா் சந்தை, காய்கறி மாா்க்கெட், சாலையோர வணிகா்கள் பயன்படுத்திய முத்திரையிடாத எடையளவுகள் மற்றும் தராசுகள் ஆகியவை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) மு. பாஸ்கரன் தலைமையிலான தொழிலாளா் துறை அலுவலா்கள், தொழிலாளா் துணை ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள், முத்திரை ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் பெரம்பலூரிலுள்ள காய்கனிச் சந்தை மற்றும் சாலையோர வணிகா்களிடம் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது முத்திரையிடாத எடையளவுகள், மின்னணுத் தராசுகள், எடைகற்கள் ஆகியவற்றை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சட்டமுறை எடையளவு சட்டத்தின் படி, உரிய முத்திரையிடாமல் எடையளவுகளைப் பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தும் வணிகா்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, அனைத்து வியாபாரிகளும் உரிய காலத்தில் தங்களது எடையளவுகளை முத்திரையிட்டு பயன்படுத்த வேண்டும் என தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) மு. பாஸ்கரன்

வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.