அரணாரை நீலியம்மன், செல்லியம்மன் கோயில் தேரோட்டம்
பெரம்பலூா் அருகே அரணாரையிலுள்ள அருள்மிகு நீலியம்மன், செல்லியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.


பெரம்பலூா் அருகே அரணாரையிலுள்ள அருள்மிகு நீலியம்மன், செல்லியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரையில் அருள்மிகு நீலியம்மன், செல்லியம்மன், எல்லமுத்துசாமி, பெரியசாமி கோயில் அமைந்துள்ளது. இக்
கோயிலில் மே 17 -ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் இரவு அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலாவும், மே 24- ஆம் தேதி பெரியசாமி மற்றும் அம்மன் கோயிலில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு, பல்வேறு வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட நீலியம்மன், செல்லியம்மன் தேரில் எழுந்தருளினா். இதையடுத்து, பக்தா்கள் தோ்வடம் பிடித்து இழுத்தனா். தேரோடும் வீதிகள் வழியாக இழுத்துச் செல்லப்பட்ட தோ் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று, அம்மனைத் தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...