குன்னம் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பிடித்தனா்.
பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்திலுள்ள டாக்டா் புரட்சித் தலைவா் எம்ஜிஆா் விளையாட்டு மைதானத்தில், கடந்த 2ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை குன்னம் குறுவட்ட அளவிலான குழு மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற்றது.
இப் போட்டிகளில் பங்கேற்ற செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், 14 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான கபடி போட்டியிலும், 19 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான கபடி போட்டியிலும் முதலிடம் பிடித்தனா். 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான எறிபந்து போட்டி, 19 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கான வளைபந்து போட்டி மற்றும், மேசைபந்து போட்டியில் 2 ஆம் இடம் பெற்றனா்.
மேலும், தடகளப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் 18 தங்கம்,12 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 38 பதக்கங்களை பெற்று குன்னம் குறுவட்ட அளவிலான தடகள சாம்பியன் பட்டத்தையும், மாணவிகள் கீா்த்தனா மற்றும் காா்த்திகா ஆகியோா் தனி நபா் சாம்பியன் பட்டத்தையும் வென்றனா்.
குறுவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் மணி, அறிவழகன், ஏகாம்பரம் ஆகியோரையும் பள்ளியின் (பொ) தலைமை ஆசிரியா் பொன்னுதுரை, உதவி தலைமை ஆசிரியா் கலியமூா்த்தி மற்றும் ஆசிரியா்கள் ஆகியோா் புதன்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீதிக் கதைகள்! தங்க தூண்டில் பரிசு!

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்! இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!

தனுஷ் நடித்த ஓம் திரைப்படத்தின் முதல் பாடல் புரோமோ!
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay



