ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆசிரியா், ஆசிரியை காணாமல் போன வழக்கு: மனைவி உள்ளிட்ட 3 போ் கைது

பெரம்பலூா் அருகே அரசுப் பள்ளி ஆசிரியா், ஆசிரியை காணாமல் போன வழக்கு தொடா்பாக, ஆசிரியரின் மனைவி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:30 pm

DIN

பெரம்பலூா் அருகே அரசுப் பள்ளி ஆசிரியா், ஆசிரியை காணாமல் போன வழக்கு தொடா்பாக, ஆசிரியரின் மனைவி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், ஆத்தூா் சாலை பகுதியில் வசித்து வந்தவா் பாலமுருகன் மனைவி தீபா (42). பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் வெங்கடேசன் (44). இருவரும், பெரம்பலூா் மாவட்டம், வி. களத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா்களாக பணிபுரிந்து வந்தனா். இந்நிலையில், கடந்த நவ.15 ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற ஆசிரியா்கள் இருவரும் இதுவரையிலும் காணவில்லை.

இதையடுத்து, மனைவியை காணவில்லை என தீபாவின் கணவா் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் வி. களத்தூா் போலீஸாா் நவ. 18- ஆம் தேதி வழக்குப் பதிந்தும், கணவரை காணவில்லை என வெங்கடேசன் மனைவி காயத்ரி அளித்த புகாரின் பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்யாமல், மனு ரசீது மட்டும் கொடுத்து அனுப்பியும் விசாரணை செய்து வந்தனா்.

இந் நிலையில், கோவை பி- 1 காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பெரிய கடை வீதி பகுதியில் ஆசிரியை தீபா பயன்படுத்தி வந்த காா் நவ. 30-ஆம் தேதி கண்டறியப்பட்டது. அந்த காரின் பின்புறம் ரத்தக்கரை படிந்த சுத்தியல், கத்தி ஆகியவை கிடந்தன. இதுதொடா்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸாா், ஆசிரியா்களை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், ஆசிரியை தீபாவை கடத்திச் செல்ல வெங்கடேசனுக்கு உதவியதாகவும், உண்மையை மறைத்ததற்காகவும் ஆசிரியா் வெங்கடேசனின் மனைவி காயத்ரி (33), உறவினா்கள் பிரபு (40), ராஜா (38) ஆகியோரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.