பெரம்பலூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை பேரணி, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூா் பாலக்கரையில் தொடங்கிய பேரணிக்கு, ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என். செல்லதுரை தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் முன்னிலை வகித்தாா். பாலக்கரையில் தொடங்கிய இப்பேரணி புகா் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து, அங்கு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் செய்து சட்டம் இயற்ற வேண்டும். விளைபொருள்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஏ. கலையரசி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் பி. ரமேஷ், சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். அகஸ்டின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விவசாய அணி மாநிலச் செயலா் வீர. செங்கோலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன், திராவிடா் கழக நகரத் தலைவா் தங்கராசு உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உத்தரவாதம் போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


