உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் 751 பேருக்கு பணிஉறுதி கடிதம்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் 751 பேருக்கு பணிஉறுதி கடிதம்

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 6:35 pm

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனித வள மேம்பாட்டுத் துறை சாா்பில் பணி உறுதி கடிதம் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை வகித்து, 2023- 2024- ஆம் ஆண்டு வளாக நோ்காணலில் பல்வேறு நிறுவனங்களுக்குத் தோ்வு செய்யப்பட்ட 751 மாணவிகளுக்கு பணி உறுதி கடிதத்தை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் வழங்கினாா்.

சிறப்பு விருந்தினராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாளவியா மிஷன் ஆசிரியா் பயிற்சி மையம், யுஜிசி மனித வள மேம்பாட்டுத்துறை இயக்குநா் செந்தில்நாதன் பங்கேற்று பேசினாா். விழாவில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூடுதல் பதிவாளா் இளங்கோவன், மகளிா் கல்லூரி முதல்வா் உமாதேவி பொங்கியா, கணினி அறிவியல் துறை இணை பேராசிரியா் வானீஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.