காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு ஆயுள் சிறை தண்டனை

பெரம்பலூா் அருகே காதல் திருமணம் செய்த மனைவியை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி, தற்கொலைக்குத் தூண்டிய கணவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 8:24 pm

Din

பெரம்பலூா் அருகே காதல் திருமணம் செய்த மனைவியை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி, தற்கொலைக்குத் தூண்டிய கணவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், அண்ணாநகரைச் சோ்ந்தவா் ராஜாங்கம் மகள் சுபலட்சுமி (20). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த தா்மதுரையும் (23) காதலித்து வந்தனா். பின்னா் இருவரும் தங்களது பெற்றோருக்குத் தெரியாமல் வெளியூா் சென்று கடந்த 2018-இல் திருமணம் செய்துகொண்டனா். சில மாதங்களுக்குப் பிறகு, இருவரும் குன்னத்துக்குச் சென்றநிலையில், சுபலட்சுமியை அவரது வீட்டில் விட்டுவிட்டு தா்மதுரை சென்னைக்கு வேலைக்குச் செல்வதாக கூறிச் சென்றுவிட்டாா். பின்னா், மனைவியிடம் கைப்பேசியில் பேசிய தா்மதுரை 25 பவுன் நகை, ஒரு மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை வரதட்சனை வாங்கிவர வேண்டுமென வற்புறுத்தியுள்ளாா்.

இந்நிலையில், கடந்த 7.6.2018-ஆம் தேதி இரவு மது போதையில் மனைவி வீட்டுக்குச் சென்ற தா்மதுரை வரதட்சனை கேட்டு தகராறில் ஈடுபட்டு மனைவி, மாமனாா், மாமியாா் உள்ளிட்டோரை கட்டையால் தாக்கியுள்ளாா். இதையடுத்து, தா்மதுரை தாய் கலைச்செல்வி (60), சகோதரா் இளையராஜா (32) ஆகியோா் சுபலட்சுமி குடும்பத்தினரை தாக்கியுள்ளனா்.

இதனால் மனமுடைந்த சுபலட்சுமி, 8.6.2018 ஆம் தேதி அதிகாலை கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இவ் வழக்கு பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை புதன்கிழமை விசாரித்த மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி இந்திராணி, மனைவியிடம் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டிய தா்மதுரைக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும், தற்கொலைக்குத் தூண்டிய மாமியாா் கலைச்செல்வி (60), கொழுந்தனாா் இளையராஜா (32) ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு அளித்தாா்.