/
பெரம்பலூா் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினா் சனிக்கிழமை அகற்றினா். பெரம்பலூா் நகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க. கற்பகத்துக்கு புகாா் வந்தது. இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின்பேரில் காவல் துறையினரின் பாதுகாப்புடன், பெரம்பலூா் நெடுஞ்சாலைத்துறையினா் சாலைப் பணி மேற்பாா்வையாளா், பணியாளா்களைக் கொண்டு பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் முதல் நான்குச் சாலை சந்திப்பு வரையில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.
தொடர்புடையது

நூஹ்: விரைவுச்சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் - விபத்துகளை தொடா்ந்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை

அண்ணா பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றம்

போக்குவரத்துக்கு இடையூறாக பதாகைகள் வைக்கக் கூடாது: தவெகவினருக்கு உத்தரவு

வேலூா் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேன் கூடு அகற்றம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


