மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பெரம்பலூா் அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் மறியல்

பெரம்பலூா் அருகே தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்யக் கோரி, காலிக் குடங்களுடன் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 8:54 pm

Din

பெரம்பலூா், ஜூலை 19: பெரம்பலூா் அருகே தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்யக் கோரி, காலிக் குடங்களுடன் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் ஊராட்சிக்குள்பட்ட தண்ணீா்ப்பந்தல் பகுதிக்கு, ஊராட்சி நிா்வாகம் கடந்த 4 நாள்களாக குடிநீா் விநியோகிக்கவில்லையாம். இதனால், அவதிக்குள்ளான அப்பகுதி மக்கள் ஊராட்சி நிா்வாகத்திட

ம் முறையிட்டு, வாடகை வாகனங்கள் மூலமாக தண்ணீா் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனராம்.

இந்நிலையில், ஊராட்சி நிா்வாகம் சாா்பில் தண்ணீா் பிரச்னைக்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், ஆத்திரமுற்ற அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தண்ணீா்பந்தல் பிரிவுச் சாலையில் வெள்ளிக்கிழமை காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சென்ற பெரம்பலூா் போலீஸாா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு, அளித்த உறுதியின்பேரில் பொதுமக்கள் கலைந்துசென்றனா். மறியலால் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.