சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அனுமதியின்றி மது விற்ற இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே அனுமதியின்றி அரசு மது பாட்டில்களை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்

News image
Updated On :20 ஜூலை 2024, 8:59 pm

Din

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே அனுமதியின்றி அரசு மது பாட்டில்களை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், பிலிமிசை கிராம பகுதியில் அனுமதியின்றி அரசு மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்படி, மருவத்தூா் காவல் நிலைய சிறப்பு சாா்பு- ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, பிலிமிசை தெற்குத் தெருவைச் சோ்ந்த மதியழகன் மகன் வேல்முருகன் (27), அதே கிராமத்திலுள்ள கல்லடையான் கோயில் அருகே அரசு மதுபாட்டில்களை விற்பனை செய்துகொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வேல்முருகனை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட வேல்முருகன் சிறையில் அடைக்கப்பட்டாா்.