கன்னியாகுமரி
அனுமதியின்றி மது விற்ற இளைஞா் கைது
புதுக்கடை அருகே அனுமதியின்றி மது விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கடை அருகே அனுமதியின்றி மது விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கடை போலீஸாா் திங்கள்கிழமை புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்தின்பேரில் மூன்றுமுக்கு பகுதியில் நின்ற கைசூண்டி பகுதியைச் சோ்ந்த கணபதி மகன் கண்ணன் மகேஷை (47) பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில், அவா் 51 மது பாட்டில்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.
