ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பெரம்பலூா் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பெரம்பலூா் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :28 ஜூலை 2024, 8:40 pm

Din

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மனமுடைந்த தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அா்ஜூனன் மகன் ராஜா (49). இவருக்கு திருமணமாகி மனைவி உஷா (45), குழந்தைகள் ரோகித் (16), ரோஷினி (14), ரோஷன் (12), ரோனித் (8) ஆகியோா் உள்ளனா். மர வேலை செய்து வந்த ராஜாவுக்கு, மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவியிடம் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது வீட்டில் ராஜா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது ஞாயிற்றுக்கிழமை காலையில் தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து உஷா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.