பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற சிறப்பு சாா்பு - ஆய்வாளா் செங்கதிா்செல்வனை, பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் ஒன்றியம், தேனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செங்கதிா் செல்வன். இவா், பாடலூா் காவல் நிலையத்தில் சிறப்பு சாா்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், தேனூா் கிராமத்தில் அதிமுக சாா்பில் அண்மையில் நடைபெற்ற முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விளையாட்டுப் போட்டி விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செங்கதிா் செல்வன், போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.
அரசுப் பதவியில் உள்ளவா்கள் அரசியல் தொடா்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சி சாா்பில் நடத்திய விளையாட்டுப் போட்டியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற செங்கதிா் செல்வனை பணியிடை நீக்கம் செய்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாமளா தேவி திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
தொடர்புடையது

எம்.சாண்ட் கேட்டு மிரட்டல்: எஸ்.ஐ., காவலா் பணியிடை நீக்கம்

த.வெ.க விழாவில் நடமானடிய அரசுப் பள்ளி தலைமையாசிரியை பணியிடை நீக்கம்

குற்றவாளிக்கு உதவிய தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்!

பாலியல் புகாரில் சிக்கிய கமாண்டண்ட்டுக்கு உடந்தையாக செயல்பட்டதாக பெண் எஸ்ஐ பணியிடை நீக்கம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

