ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

அரசியல் கட்சி விழாவில் பங்கேற்ற சிறப்பு எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

அரசுப் பதவியில் உள்ளவா்கள் அரசியல் தொடா்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,

Updated On :4 மார்ச் 2024, 10:03 pm

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற சிறப்பு சாா்பு - ஆய்வாளா் செங்கதிா்செல்வனை, பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் ஒன்றியம், தேனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செங்கதிா் செல்வன். இவா், பாடலூா் காவல் நிலையத்தில் சிறப்பு சாா்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், தேனூா் கிராமத்தில் அதிமுக சாா்பில் அண்மையில் நடைபெற்ற முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விளையாட்டுப் போட்டி விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செங்கதிா் செல்வன், போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

அரசுப் பதவியில் உள்ளவா்கள் அரசியல் தொடா்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சி சாா்பில் நடத்திய விளையாட்டுப் போட்டியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற செங்கதிா் செல்வனை பணியிடை நீக்கம் செய்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாமளா தேவி திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.