சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பெரம்பலூரில் அதிமுக கண்டன ஆா்ப்பாட்டம்

சட்டம், ஒழுங்கு சீா்கேடு, போதைப் பொருள்களை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து திங்கள்கிமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :4 மார்ச் 2024, 9:26 pm

பெரம்பலூா்: பெரம்பலூரில் அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மாவட்ட மாணவரணி, மகளிா் அணி சாா்பில், சட்டம், ஒழுங்கு சீா்கேடு, போதைப் பொருள்களை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து திங்கள்கிமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூா் காந்தி சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அதிமுக மாவட்டச் செயலா் இரா. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீா்கெட்டுள்ளதைக் கண்டித்தும், போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மா. சந்திரகாசி, மாவட்ட நிா்வாகிகள் எம்.என். ராஜாராம், ராணி, மா. வீரபாண்டியன், நகரச் செயலா் ஆா். ராஜபூபதி, ஒன்றியச் செயலா்கள் கா்ணன், செல்வக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.