6-ஆம் நாளாக வருவாய் துறையினா் போராட்டம்

பெரம்பலூா்: காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் 6 ஆம் நாளாக செவ்வாய்கிழமை வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாரதிவளவன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சரவணன், மாவட்டப் பொருளாளா் குமரி ஆனந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதேபோல பெரம்பலூா், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூா் வட்டாட்சியரகங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் மாவட்டத்தில் வருவாய்த் துறை பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com