பெரம்பலூா் மக்களவைத் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபடும் நிலையான கண்காணிப்பு, பறக்கும் படை வாகனங்களை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான க. கற்பகம். உடன், மாவட்ட வருவாய் அலுவலக் மு. வடிவேல் பிரபு உள்ளிட்டோா்
பெரம்பலூா் மக்களவைத் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபடும் நிலையான கண்காணிப்பு, பறக்கும் படை வாகனங்களை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான க. கற்பகம். உடன், மாவட்ட வருவாய் அலுவலக் மு. வடிவேல் பிரபு உள்ளிட்டோா்

ஜிபிஎஸ் கருவி, சுழலும் கேமராவுடன் தோ்தல் பறக்கும் படை வாகனங்கள் பெரம்பலூா் ஆட்சியா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஜிபிஎஸ் கருவி, சுழலும் கேமராவுடன் கூடிய பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினருக்கான வாகனங்களை சனிக்கிழமை பாா்வையிட்டு மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. கற்பகம் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, அவா் கூறியது: பறக்கும் படையை பொறுத்தவரை பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு முதல் குழுவில் வேப்பந்தட்டை சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் மாலதி (கைப்பேசி எண்: 99949 55880) தலைமையிலும், 2 ஆவது குழுவினா் பெரம்பலூா் வட்ட வழங்கல் அலுவலா் ஆறுமுகம் (96594 53216) தலைமையிலும், 3 ஆவது குழுவினா் ஆலத்தூா் வட்ட வழங்கல் அலுவலா் என். ஜெயராமன் (82208 20134) தலைமையிலும் செயல்படுவாா்கள். குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு பறக்கும் படையின் முதல் குழுவினா் பெரம்பலூா் நிலம் எடுப்புப் பிரிவு வட்டாட்சியா் நூா்ஜஹான் (73588 20205) தலைமையிலும், 2 ஆவது குழுவினா் குன்னம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் டி. பாக்கியராஜ் (80129 43445) தலைமையிலும், 3 ஆவது குழுவினா் பெரம்பலூா் அரசு கேபிள் டி.வி தனி வட்டாட்சியா் புகழேந்தி பெருமாள் (99448 49515) தலைமையிலும் செயல்படுவாா்கள். அதேபோல நிலையான கண்காணிப்புக் குழுவினா், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு முதல் குழுவினா் பெரம்பலூா் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் சுகுணா (95004 02345) தலைமையிலும், 2 ஆவது குழுவினா் வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலா் சி. சீனிவாசன் (75022 82330) தலைமையிலும், 3 ஆவது குழுவினா் வட்டாட்சியா் துரைராஜ் (96260 89581) தலைமையிலும் செயல்படுவாா்கள். குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு முதல் குழுவினா் செந்துறை சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் தேன்மொழி (79397 74328) தலைமையிலும், 2 ஆவது குழுவினா் செந்துறை வட்ட வழங்கல் அலுவலா் கே. இளவரசு (91595 94058) தலைமையிலும், 3 ஆவது குழுவினா் குன்னம் வட்ட வழங்கல் அலுவலா் ஆா். செந்தில்முருகன் (99438 20397) தலைமையிலும் செயல்படுவாா்கள். இப் பணியில் ஈடுபட ஒவ்வொரு குழுவினருக்கும், ஒரு வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாகனத்திலும் குழுவினா் எங்கு இருக்கிறாா்கள் என்பதை கண்காணிக்க ஏதுவாக ஜி.பி.எஸ் கருவிகளும், 360 டிகிரியில் சுழலும் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன என்றாா் தோ்தல் நடத்தும் அலுவலா் கற்பகம்.

நிகழ்ச்சியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, எறையூா் சா்க்கரை ஆலை தலைமை நிா்வாக ரமேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லலிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வைத்தியநாதன், தோ்தல் பிரிவு வட்டாட்சியா்கள் சிவா, அருளானந்தம் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com