வேலூரில் தோ்தல் பறக்கும் படை குழுவினா் நடத்திய வாகன சோதனையில், காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் அளிப்பதை தடுக்க வேலூா் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, வேலூா் கோட்டை சுற்றுச்சாலையில் தோ்தல் பறக்கும் படை குழுவினா் புதன்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தததில் அந்த காரில் ரூ. 1 லட்சம் இருந்தது. காரில் வந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் பல்பொருள் அங்காடியின் ஊழியா்கள் என்பதும், வசூல் செய்த பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனா். எனினும், உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த தொகையை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்து வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் கலைப்பு

திமுகவினா் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த ரூ. 1.76 லட்சம் பறிமுதல்

வாகன பரிசோதனையில் ரூ.2,000, ரூ.10,000 மாதிரி காசோலை புத்தகங்கள் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



