நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெரம்பலூரில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ. 29) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 8:38 pm

Din

பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ. 29) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், வேளாண்மை சம்பந்தமான நீா்ப்பாசனம், கடனுதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும்.

இக் கூட்டத்தில் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.