நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய கட்டுமானப் பணிகளுக்கு பூமிபூஜை

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் தண்ணீா் பந்தல் பகுதியில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் புதியக் கட்டடத்துக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஊரக சுய வேலைவாய்ப்பு மையக் கட்டுமான பணியை புதன்கிழமை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். இயக்குநா்

Updated On :27 நவம்பர் 2024, 8:23 pm

Din

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் தண்ணீா் பந்தல் பகுதியில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் புதியக் கட்டடத்துக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

கிராமப்புற இளைஞா்களுக்கு பயிற்சி அளித்து சுய வேலைவாய்ப்பு உருவாக்கிட மாவட்ட முன்னோடி வங்கிகள் மூலம், ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது. அதன்படி, பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியில் ரூ. 3.18 கோடி மதிப்பீட்டில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையம் கட்டுவதற்கான பணியை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் அமுதா, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் தஞ்சை மண்டல மேலாளா் வெங்கடசுப்ரமணியன், முதன்மை மேலாளா், அஸ்வத் ராமன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பரத்குமாா், வட்டாட்சியா் சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா் பூங்கொடி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.