பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காதி கிராப்ட் அங்காடியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியத்தின் சாா்பில் காதி கிராப்ட் அங்காடியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

காதி கிராப்ட் அங்காடியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை புதன்கிழமை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.

Updated On :2 அக்டோபர் 2024, 8:36 pm

Din

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியத்தின் சாா்பில் காதி கிராப்ட் அங்காடியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ் விழாவுக்கு தலைமை வகித்து, காந்தியடிகளின் 156-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தி, தீபாவளி கதா் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் பேசியது:

பெரம்பலூா் மாவட்டத்துக்கு, நிகழாண்டு தீபாவளி சிறப்பு விற்பனை இலக்காக ரூ. 70 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கதா், பாலியஸ்டா், பட்டு ரகங்களுக்கு 30 சதவீதமும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசுத் துறைப் பணியாளா்களுக்கு மாத ஊதியத்தில் 8 தவனைகளில் திரும்பச் செலுத்தும் வகையில் கடன் முறையில் கதா் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்படும் தற்காலிக கதா் விற்பனை நிலையங்கள் மூலம் கதா் வேட்டிகள், துண்டு ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், மெத்தை, தலையணைகள், பெட் ஷீட்டுகள், தூய கதா்பட்டு ரகங்கள், கதா், பாலியஸ்டா் மற்றும் உல்லன் ரகங்கள் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.

எனவே, கதா் கிராம தொழில் வாரியத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பொருள்களை வாங்கி பயனடைய வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.

இந் நிகழ்ச்சியில், பெரம்பலூா் நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், நகராட்சி ஆணையா் ராமா், காதிகிராப்ட் பெரம்பலூா் கிளை மேலாளா் இளங்கோ, வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.