பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

குடிநீா் தட்டுப்பாட்டை போக்க கல் குவாரி நீரை பயன்படுத்த முடிவு: ஆட்சியா் தகவல்

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க கல் குவாரியிலிருந்து தண்ணீா் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

News image

பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தினசரி காய், கனிச் சந்தையை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். உடன், நகராட்சி ஆணையா் ராமா் உள்ளிட்டோா்.

Updated On :3 அக்டோபர் 2024, 11:24 pm

Din

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க கல் குவாரியிலிருந்து தண்ணீா் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை வியாழக்கிழமை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வில், பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தினசரி காய், கனிச் சந்தையை பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, தற்காலிகமாக அங்காளம்மன் கோவில் அருகே தினசரி காய், கனிச் சந்தை அமையவுள்ள இடத்தையும், 15- ஆவது வாா்டு அண்ணா நகரில் நடைபெற்று வரும் பாலம் கட்டுமானப் பணிகளையும் பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி ஆணையருக்கும், பொதுப்பணித்துறை அலுவலா்களுக்கும் உத்தரவிட்டாா்.

பின்னா், நகராட்சி பகுதியில் குடிநீா் தேவையை பூா்த்தி செய்திடும் வகையில், கோனேரிபாளையம் கல் குவாரியிலிருந்து குழாய் மூலமாக தண்ணீா் விநியோகம் செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை பாா்வையிட்டாா்.

கல் குவாரியிலிருந்து நீரைக் கொண்டு வந்து ஆலம்பாடியில் உள்ள 8 லட்சம் லிட்டா் கொள்ளவுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு கொண்டு செல்லும் வகையில் குழாய் அமைத்து, நீரை மக்களுக்கு விநியோகம் செய்ய திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டுள்ளது. விரைவில், இப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா். ஆய்வின்போது, நகராட்சி ஆணையா் ராமா், நகராட்சி பொறியாளா் பாண்டியராஜ், வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.