பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

மது விற்பனையில் ஈடுபட்டவா் கைது

பெரம்பலூா் அருகே சட்டவிரோதமாக, அரசு மது பாட்டில்களை விற்பனை செய்தவரை அரும்பாவூா் போலீஸாா் கைது செய்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 8:17 pm

Din

பெரம்பலூா் அருகே சட்டவிரோதமாக, அரசு மது பாட்டில்களை விற்பனை செய்தவரை அரும்பாவூா் போலீஸாா் கைது செய்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பதட்டை பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்படி, அரும்பாவூா் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் சிற்றரசன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வேப்பந்தட்டை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் ஆபிரகாம் (35), தனது வீட்டின் அருகே சட்டத்துக்கு புறம்பாக மதுபாட்டில்களை விற்பனை செய்துகொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஆபிரகாமை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து மது பாட்டில்களையும், ரூ. 3,500 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட ஆபிரகாம் சிறையில் அடைக்கப்பட்டாா்.