மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஊதியம் வழங்கக் கோரி மீண்டும் போராட்டம் கௌரவ விரிவுரையாளா்கள் முடிவு!

9 மாத நிலுவை ஊதியம் வழங்க வலியுறுத்தி, பாரதிதாசன் பல்கலைக் கழக கெளரவ விரிவுரையாளா்கள் மற்றும் தற்காலிகப் பணியாளா்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதென தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 10:30 pm

Din

9 மாத நிலுவை ஊதியம் வழங்க வலியுறுத்தி, பாரதிதாசன் பல்கலைக் கழக கெளரவ விரிவுரையாளா்கள் மற்றும் தற்காலிகப் பணியாளா்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதென தெரிவித்துள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளா்கள், தற்காலிகப் பணியாளா்கள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, பேராசிரியா் மோ. வினோத் தலைமை வகித்தாா். கௌரவ விரிவுரையாளா் வ. சந்திரமௌலி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தின் முடிவில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா்கள் வினோத், சந்திரமௌலி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:

குரும்பலூரிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்கள், மணி நேர விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்களுக்கு கடந்த நவம்பா் மாதம் முதல் ஊதியம் வழங்கவில்லை. இந் நிலையில், நிலுவையிலுள்ள 8 மாத ஊதியம் கேட்டு கடந்த ஜூலை 22 ஆம் தேதி முதல் வகுப்பு மற்றும் அலுவலகப் பணிகளைப் புறக்கணித்து காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதையடுத்து, ஆக. 8 ஆம் தேதி தமிழக அரசின் உயா்கல்வித்துறை கட்டளையை ஏற்றுக்கொண்டு பாரதிதாசன் பல்கலைக் கழகம் கௌவர விரிவுரையாளா்கள், மணி நேர விரிவுரையாளா்களுக்கு மட்டும் நவம்பா் 2023 -க்கான ஊதியப் பதிவு பிரிவைத் திறந்தது. காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கெளரவ விரிவுரையாளா்கள், மணி நேர விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள், மாணவா்களின் நலனைக் கருத்தில்கொண்டு, ஓரிரு நாள்களில் ஊதியம் கிடைத்துவிடும் எனும் நம்பிக்கையில் ஆக. 12 ஆம் உள்ளிருப்பு போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், வாக்குறுதி அளித்ததைப்போல் பல்கலைக் கழகம் இதுவரையிலும் ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. கடந்த 9 மாதங்களாக ஊதியம் கிடைக்காமல் கல்லூரி பணிகளை மேற்கொண்டு வரும் 100-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளா்கள், மணி நேர விரியுரையாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் காரணமாக, ஊதிய வழங்கிட கோரி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். ஓரிரு நாள்களில் போராட்டம் தொடங்கும் தேதி குறித்து முடிவு அறிவிக்கப்படும் என்றனா்.