பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம்: அதிமுகவினா் ஆதரவு

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 9:46 pm

முதுகுளத்தூரில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்களுக்கு

வியாழக்கிழமை அதிமுகவினா் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றனா்.

பல்கலைக்கழக மாநியக் குழு நிா்ணயித்த ஊதியம், 12 மாதங்களுக்கும் ஊதியம், ரூ. 25 லட்சம் பணிக்கொடை, மகப்பேறு விடுப்பு, வருங்கால வைப்பு நிதி தொடா்பான கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் 4-ஆவது நாளாக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முதுகுளத்தூா் அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் கல்லூரி வாசலில் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கமிட்டனா். இவா்களுக்கு ஆதரவளித்து அதிமுகவினரும் போராட்டத்தில் பங்கேற்றனா்.

அப்போது தங்களது கோரிக்கைகளை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி மூலம் நிறைவேற்ற வேண்டும். வருகிற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் எங்களது கோரிக்கைகளைப் பேச வேண்டும் என கோரிக்கை மனுவை முதுகுளத்தூா் அதிமுக மத்திய ஒன்றியச் செயலா் எஸ்.டி.செந்தில்குமாரிடம் வழங்கினா்.