யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 10:45 pm

Syndication

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டாா். பின்னா், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 14 மனுக்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு, உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய தீா்வு காண வேண்டுமென காவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இம் முகாமில், காவல் நிலைய ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள், சிறப்புப் பிரிவு காவல்துறையினா் மற்றும் பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.