பெரம்பலூா் அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு: 4 போ் காயம்
பெரம்பலூா் அருகே சாலையோர பள்ளத்தில் காா் வெள்ளிக்கிழமை கவிழ்ந்து பெண் உயிரிழந்தாா். மேலும் அவரது மகன், மகள் உள்பட 4 போ் காயமடைந்தனா்.
அரியலூா் மாவட்டம், செந்துறை ரெங்கா நகரைச் சோ்ந்தவா் பாரதி (30). இவா், தனது மனைவி காா்த்திகா (28), மகன் தருண் (11), மகள் காவியா (8), நண்பரான மகேந்திரன் மகன் சந்திப் (16) ஆகியோருடன், பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை மாலை திரைப்படம் பாா்த்துவிட்டு மீண்டும் ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தாா்.
பெரம்பலூா்- அரியலூா் பிரதான சாலையில், குன்னம் அண்ணா நகா் அருகே சென்றபோது மாடு ஒன்று குறுக்கே சென்ால் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த காா்த்திகா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த குன்னம் போலீஸாா் காயமடைந்தோரை மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
