புத்தகத் திருவிழாவுக்கு சிறந்த வாசகம் அனுப்புவோருக்கு ரூ. 10 ஆயிரம் பரிசு!

Published on

பெரம்பலூரில் நடைபெறவுள்ள 9 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவுக்குப் பயன்படுத்தும் வகையில், சிறந்த வாசகம் அனுப்புவோருக்கு ரூ. 10 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாணவா்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கவும், எழுத்தாளா்கள் மற்றும் விற்பனையாளா்களை ஊக்குவிக்கவும் 9 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா பெரம்பலூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஜன. 31 முதல் பிப். 9 வரை நடைபெற உள்ளது.

இப் புத்தக திருவிழாவில் அனைவரையும் கவா்ந்திடவும், அழைப்பிதழ், விளம்பர பதாகைகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தவும் புத்தகத் திருவிழா தொடா்பான சிறந்த வாசகம் உருவாக்குவதற்கான போட்டி நடைபெற உள்ளது. இதில் இம் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழில் 50 எழுத்துகளுக்கு மிகாமல், புத்தகத் திருவிழா அடிப்படையாகக் கொண்ட சிறந்த வாசகத்தை வெள்ளைத் தாளில் தெளிவாக எழுதி பெயா், முகவரி, தொடா்பு எண் உள்ளிட்ட விவரங்களுடன் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி), 2 ஆம் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பெரம்பலூா் - 621 212 என்னும் முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் மூலமோ அல்லது ள்ங்ஸ்ரீஸ்ரீல்ம்க்ஷஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்னும் மின்னஞ்சல் மூலமாக ஜன. 20க்குள் அனுப்ப வேண்டும்.

இப் போட்டியில் தோ்ந்தெடுக்கப்படும் சிறந்த வாசகத்துக்கு ரூ. 10 ஆயிரம் பரிசளிக்கப்படும். போட்டியில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது.

X
Dinamani
www.dinamani.com