பெரம்பலூர்
அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு
பெரம்பலூரில் அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்துகிடந்தது வியாழக்கிழமை காலை தெரியவந்தது.
பெரம்பலூரில் அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்துகிடந்தது வியாழக்கிழமை காலை தெரியவந்தது.
பெரம்பலூா் புறநகா்ப் பகுதியான துறைமங்கலம் மூன்று சாலை சந்திப்புப் பகுதியில், அடையாளம் தெரியாத சுமாா் 70 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா் உயிரிழந்துக் கிடப்பதாக பெரம்பலூா் நகரப் போலீஸாருக்கு வியாழக்கிழமை காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற போலீஸாா் முதியவரின் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
