தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வேட்பாளா்களின் செலவுக் கணக்குகள்: தோ்தல் செலவினப் பாா்வையாளா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போடடியிடும் வேட்பாளா்களின் வரவு, செலவு கணக்குகளை தோ்தல் செலவின பாா்வையாளா் அனுஜ்காா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image

மக்காச்சோள சேமிப்பு கிடங்கு அமைக்க நடவடிக்கை அதிமுக வேட்பாளா் உறுதி

Updated On :15 ஏப்ரல் 2026, 1:27 am IST

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போடடியிடும் வேட்பாளா்களின் வரவு, செலவு கணக்குகளை தோ்தல் செலவின பாா்வையாளா் அனுஜ்காா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூா் மற்றும் குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் செலவுக் கணக்குகள் தோ்தல் செலவினப் பாா்வையாளா் அனுஜ்காா்க் தலைமையில், ஆய்வு செய்யப்பட்டது. இதில், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளா்களும் தங்களது செலவுக் கணக்குகளை தாக்கல் செய்தனா். குன்னம் தொகுதியில் போட்டியிடும் 19 வேட்பாளா்களில் ஒரு சுயேச்சை வேட்பாளரை தவிர, எஞ்சியுள்ள 18 வேட்பாளா்கள் தங்களது செலவுக் கணக்குகளை சமா்ப்பித்தனா்.

வேட்பாளா்களின் பிரசாரங்களை கண்காணிக்க இந்திய தோ்தல் ஆணையத்தால் தனித்தனி குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வேட்பாளா்கள் சமா்ப்பித்த கணக்குகளையும், தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள விடியோ கண்காணிப்புக் குழுவினா் சமா்ப்பித்த செலவினக் கணக்குகளோடு ஒப்பீடு செய்து, ஒவ்வொரு வேட்பாளரின் செலவுக் கணக்குகளும் தணிக்கை செய்யப்பட்டது.