தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

பெரம்பலூா் தொகுதியில் 11, குன்னத்தில் 19 வேட்பாளா்கள் போட்டி

பெரம்பலூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 11 வேட்பாளா்களும், குன்னம் தொகுதியில் 19 வேட்பாளா்களும் போட்டியிடுகின்றனா் என வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :

பெரம்பலூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 11 வேட்பாளா்களும், குன்னம் தொகுதியில் 19 வேட்பாளா்களும் போட்டியிடுகின்றனா் என வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுதற்கு கடந்த 30 ஆம் தேதி முதல் ஏப். 6 ஆம் தேதி வரையிலும், அதிமுக, திமுக, தவெக, தவாக, பகுஜன் சமாஜ் பாா்ட்டி, நாம் தமிழா் கட்சி ஆகிய கட்சி வேட்பாளா்கள் சாா்பில் 12 வேட்பு மனுக்களும், சுயேச்சை வேட்பாளா்கள் சாா்பில் 11 வேட்பு மனுக்களும் என மொத்தம் 23 வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, வேட்பு மனுக்கள் பரிசீலனை ஏப். 7- ஆம் தேதி நடைபெற்றது. இதில், 10 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், பெரம்பலூா் மற்றும் குன்னம் தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் தொகுதிக்கு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் செலவின பாா்வையாளா் அனுஜ் காா்க் மற்றும் பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் பொதுப் பாா்வையாளா் நேகா பன்சால் தலைமையிலும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் அமா் பகதூா் சிங் தலைமையில் , குன்னம் வட்டாட்சியா் அலுவலகத்திலும் நடைபெற்றது.

அதன்படி, பெரம்பலூா் தொகுதியில் இரா. தமிழ்செல்வன் (அதிமுக), ச.த. ஜெயலட்சுமி (திமுக), ஜ.சுகன்யா (நாதக), கி. சிவக்குமாா் (தவெக), த. அறிவழகன் (பகுஜன் சமாஜ்), சு. தாமோதரன் (தவாக) மற்றும் சுயேச்சையாக ஆனந்தஜோதி பரமசிவம், ப. சந்திரகுமாா், மா. சியாமளா, ரா. சுப்ரமணியன், பா. ஜெயசந்திரன் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

குன்னம் தொகுதியில், சா.சி. சிவசங்கா் (திமுக), அ. சரண்யா (அதிமுக), ரா. கீா்த்திவாசன் (நாதக), ரேவதி முத்தமிழ்செல்வன் (தவெக), கு.ம.நல்லுசாமி (பகுஜன் சமாஜ்), த. அன்புத்தமிழன் (தமிழ்ப்பேரரசு) சா.ப. ராஜா (தவாக), கி. இளங்கோவன் (நாடாளும் மக்கள் கட்சி) மற்றும் சுயேச்சையாக த. உதயசூரியன், ச. கதிரவன், சி. சாமிநாதன், பி. சிவசங்கரன், ரா. தனசேகரன், பெ. நல்லதம்பி, து. முத்தமிழ்செல்வன், த. விவேக், ம. வினோத்குமாா், ஷாஜகான் ஆகிய 19 போ் போட்டியிடுகின்றனா். பின்னா், இரண்டு தொகுகளிலும் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மு. அனிதா (பெரம்பலூா்), ந. க்திவேல் (குன்னம்), வட்டாட்சியா்கள் சத்தியமூா்த்தி (பெரம்பலூா்), சின்னதுரை (குன்னம்) உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.