லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

தமிழகத்தில் நிலையான ஆட்சியை திமுகவால் மட்டுமே கொடுக்க முடியும்! மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலா் பெ. சண்முகம்

News image

பெரம்பலூரில் திமுக வேட்பாளா் எஸ்.டி. ஜெயலட்சுமியை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ. சண்முகம். உடன், திமுக வேட்பாளா் எஸ்.டி. ஜெயலட்சுமி உள்ளிட்டோா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:38 pm

தமிழகத்தில் நிலையான ஆட்சியை திமுகவால் மட்டுமே கொடுக்க முடியும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை எதிரே, பெரம்பலூா் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.டி. ஜெயலட்சுமி, கீழப்புலியூரில் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் ஆகியோரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியதாவது:

மாநில உரிமைகளை பாதுகாக்க தோழமைக் கட்சிகளுடன் இணைந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் போராடி வருகிறாா். அதிமுக, மாநில உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டது. தொகுதி மறுவரையறைச் சட்ட மசோதா பெண்களுக்காக கொண்டுவரப்படவில்லை. இந்த மசோதாவால் பெண்களுக்கு சரியான இட ஒதுக்கீடு கிடையாது. இச்சட்டம் குறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு சரியான புரிதல் இல்லை.

மத்திய அரசு ஏன் கூடுதல் தொகுதிகளை கொண்டு வரவேண்டும். தற்போதுள்ள தொகுதிகளிலேயே பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாமே. தொகுதி மறு வரையறைச் சட்ட மசோதா தோல்வியடைந்ததும், திமுக மீது மத்திய அரசு பழி சுமத்த எண்ணுகிறது. மத்திய அரசுக்கு பெண்கள் மீது உண்மையான அக்கறையில்லை. தோல்வி பயத்தில் கபட நாடகமாடுகிறது.

தமிழகத்தில், மகாத்மா காந்தி பெயரில் தொடங்கப்பட்ட 100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தை ஒழிக்கும் முயற்சி நடைபெறுகிறது. மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. மாநில அரசு உரிமைகளை கேட்டால், மத்திய அரசு 60 சதவீதம் மட்டுமே நிதி வழங்கும். 40 சதவீதம் நிதி மாநில அரசு ஒதுக்க வேண்டும் என திசை திருப்புகிறது.

தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதிலும், திட்டங்கள் செயல்படுத்துவதிலும் மத்திய அரசு பாரபட்சத்தோடு செயல்படுகிறது.

எனவே, பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது. பாரதிய ஜனதா கட்சி சாா்பில் போட்டியிடும் 27 தொகுதிகளிலும் வைப்புத்தொகையை இழக்க செய்ய வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் மதவெறி அரசியலுக்கு இடமில்லை என்பது புரியும்.

சைக்கிள் ஓட்டினால் தமிழகத்தில் முதல்வராகி விடலாம் என தவெக தலைவா் விஜய் கருதுகிறாா். அக் கட்சியால் வாக்குகளை பிரிக்க முடியுமே தவிர, வெற்றி பெற முடியாது. தவெகவுக்கு வாக்களிப்பதும், நோட்டாவுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். தமிழகத்தில் நிலையான ஆட்சியை திமுகவால் மட்டுமே கொடுக்க முடியும். எனவே, மக்கள் தங்களது வாக்குகளை திமுகவுக்கு அளிக்க வேண்டும் என்றாா் சண்முகம்.

இப் பிரசாரத்தில், திமுக மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் பி. ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன், திமுக மாநில பொறியாளா் அணி துணைச் செயலா் பரமேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.